|   | 
         வளர்ச்சி ஊடகத்தை  தயாரிக்கும் முறை 
           
          காளான் பூஞ்சாணத்தை  தளிப்படுத்தவும், மாசற்ற தூய ஊடகத்தில் சோதனைக் குழாய்களில் (அ) பெட்ரி தட்டுக்களில்  வைத்து பராமரிக்கவும் வளர்ச்சி ஊடகம் மிக முக்கியமாக பயன்படுகிறது. பூஞ்சாண் வளர்ச்சியை  திரவ ஊடகம் (ப்ராத்) (அ) திட அகார் ஊடகத்திலோ வளர்க்கலாம். (அகார் அகார் என்பது உருகும்  மற்றும் குளிரும் போது திடமாகும் தன்மை கொண்ட கடல் விதை களையான கீலேடியம் வகையிலிருந்து  பெறப்பட்டது). 
           
          பொதுவாக  பயன்படும் சில ஊடகங்களின் பட்டியல் பின்வருமாறு 
          
            
              - உருளைக்கிழங்கு  டெக்ஸ்ரோஸ் சர்க்கரை (பி.டி.ஏ)
 
               
             
           
          
            
              உருளைக்கிழங்கு    | 
               250 கிராம்  | 
             
            
              டெக்ஸ்ரோஸ்   | 
                20 கிராம்  | 
             
            
              அகார் அகார்    | 
              20 கிராம்  | 
             
            
              வாலை வடிநீர்     | 
              1000 மிலி (கார அமிலத்தன்மை  7)  | 
             
           
          
            
            
              
                ஓட்ஸ்    மாவு  | 
                30    கிராம்  | 
               
              
                அகார்    அகார்  | 
                20    கிராம்  | 
               
              
                வாலை    வடிநீர்  | 
                1000    மி.லி (கார அமிலத்தன்மை: 7)  | 
               
                         
            
              - கோதுமை மாவு அகார் (W.M.A)
 
             
            
              
                கோதுமை  | 
                30    கிராம்  | 
               
              
                அகார்    அகார்  | 
                30    கிராம்  | 
               
              
                வாலை    வடிநீர்  | 
                1000    மி.லி (கார அமிலத்தன்மை: 7)  | 
               
                         
            
              - மால்ட்  சாறு அகார் (எம்.இ.ஏ)
 
             
            
              
                மால்ட்    சாறு  | 
                25    கிராம்  | 
               
              
                அகார்    அகார்  | 
                20    கிராம்  | 
               
              
                வாலை    வடிநீர்  | 
                1000    மி.லி (கார அமிலத்தன்மை: 7)  | 
               
                         
            
              - ஈஸ்ட்  உருளைக்கிழங்கு டெக்ஸ்ரோஸ் சர்க்கரை (ஓய்.பி.டி.ஏ)
 
             
            
              
                ஈஸ்ட்    குருணைகள்  | 
                1    கிராம்  | 
               
              
                உருளைக்கிழங்கு  | 
                200    கிராம்  | 
               
              
                டெக்ஸ்ரோஸ்  | 
                20    கிராம்  | 
               
              
                அகார்    அகார்  | 
                20    கிராம்  | 
               
              
                வாலை    வடிநீர்  | 
                1000    மி.லி (கார அமிலத்தன்மை: 7)  | 
               
                         
           
          உருளைக்கிழங்கு  டெக்ஸ்ரோஸ் சர்க்கரை (பி.டி.ஏ) 
           
            பூஞ்சாணத்தை பிரித்தெடுக்கவும்,  பராமரிக்கவும் உருளைக்கிழங்கு டெக்ஸ்ரோஸ் சர்க்கரை அகார் வளர்ச்சி ஊடகம் பொதுவாக  பயன்படுத்தப்படுகிறது. 
             
            செய்முறை: 
          
            
              - 250 கிராம் உருளைக்கிழங்கை எடுத்து,  கழுவி, தோல் உரித்து, சிறிய துண்டுகளாக வெட்டவும்
 
              - உருளைக்கிழங்கு துண்டுகளை 500 மி.லி  நீரில் 30 நிமிடங்களுக்கு ஒரு திறந்த பாத்திரத்தில் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
 
              - அதே சமயத்தில், 20 கிராம் அகாரை 500  மி.லி நீரில் 30 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
 
              - உருளைக்கிழங்கு சாறை மஸ்லின் துணி (அ)  வடிகட்டியைக் கொண்டு சேகரிக்கவும்
 
              - 20 கிராம் டெக்ஸ்ரோஸை உருளைக்கிழங்கு  சாற்றுடன் சேர்க்கவும்
 
              - உருகிய அகாரை உருளைக்கிழங்குடன் கலந்து,  இந்த கலவையை 1 லிட்டர் ஆகும் வரை வாலை வடிநீரை சேர்க்க வேண்டும்
 
              - ஊடகத்தின் கார அமிலத் தன்மையை சரிபார்க்கவும்
 
              - இந்த கலவையை சுத்தமான குழாய்களில்  15 மிலி / குழாய் என்ற அளவில் ஊற்றி, உறிஞ்சும் தன்மையில்லாத பஞ்சைக் கொண்டு அடைக்கவும்
 
              - ஒரு கூடையில் இந்த குழாய்களை அடுக்கி,  பயனற்ற காகிதத் தாறைக் கொண்டு மூடி, நூலால் இறுக்கமாகக் கட்டவும்
 
              - இதை அழுத்தக் கொப்பரை (அ) ப்ரவுர் குக்கரில்  15 எல்.பி.எஸ் அழுத்தத்தில் 20 நிமிடங்களுக்கு வைத்து கிருமி நீக்கம் செய்யவும்
 
              - அழுத்தம் நின்றவுடன் குழாய்கனை வெளியே  எடுத்து, சாய்வான நிலையில் அகார் துண்டுகளைப் பெறுவதற்காக வைக்கவும்
 
              - திடப்படுத்திய பின், இந்தக் குழாய்களை  ஒரு கூடையில் வைத்து தூய அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும்
 
             
           
          கார  அமிலத் தன்மையை சரிபார்க்கும் முறை 
           
            வளர்ச்சி ஊடகத்தை கண்ணாடிக்  குச்சிக் கொண்டு கலக்கி, கார அமிலத் தன்மை தாளின் சிறிய துண்டை இந்த ஊடகத்தில் அமிழ்த்தவும்.  பின் வெளியே எடுத்து, நிற வரைபடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கார அமிலத் தன்மை  7 – க்கும் அதிகமாக இருந்தால், 0.1ல ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சில துளிகள் சேர்த்து,  கலக்கி கார அமிலத்தன்மை நடுநிலைமைக்குக் கொண்டு வரவும். அதேபோல் கார அமிலத் தன்மை  7-க்கு குறைவாக இருந்தால், 0.1ல சோடியம் ஹைட்டிராக்சைடு சில துளிகள் சேர்த்து கார  அமிலத் தன்மையை நடு நிலைக்குக் கொண்டு வரவும். 
          
            
               | 
             
            
              உருளைக்கிழங்குகளை  வேக வைத்தல்  | 
              அகாரை வேகவைத்தல்  | 
              உருனைக்கிழங்கு சாறு  + அகார் + சர்க்கரை  | 
             
            
               | 
             
            
              ஊடகத்தட்டுக்களை கிருமி  நீக்கம் செய்தல்  | 
              பி.டி.ஏ – வை பெட்ரி  தட்டுக்களில் ஊற்றுதல்  | 
             
           
            
           | 
          |